ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோட்டில் பூக்கள் விலை உயர்வு; மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை


ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோட்டில் பூக்கள் விலை உயர்வு; மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை
x

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

ஈரோடு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

பூக்கள் விற்பனை

ஆடிப்பெருக்கு விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் முக்கிய பண்டிகையாக இருப்பதால் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதனால் பூக்களின் விற்பனை நேற்று அமோகமாக காணப்பட்டது. ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் பூ மொத்த வியாபார கடைகள் செயல்பட்டு வருகின்றன. காலையில் இருந்தே பூக்களை வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்திருந்தனர். சிறு பூக்கடை வியாபாரிகளும் இங்கிருந்து பூக்களை மொத்தமாக வாங்கி சென்றனர்.

மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. அதேசமயம் பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

வரத்து அதிகம்

இதுகுறித்து பூ வியாபாரி என்.எஸ்.குட்டி கூறும்போது, "ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் மொத்தம் 6 பூ வியாபார கடைகள் செயல்பட்டு வருகின்றன. சத்தியமங்கலம், ஓசூர், சேலம், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தினமும் 2 டன் பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி 4 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பூக்களின் விற்பனையும் அமோகமாக காணப்பட்டது. மல்லிகை, முல்லை ஆகிய பூக்களின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.200 உயர்ந்தது. சம்பங்கி பூவின் விலை ரூ.150 உயர்ந்தது", என்றார்.

ஈரோட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

மல்லிகை - ரூ.600, முல்லை - ரூ.450, ஜாதிமல்லி - ரூ.400, சம்பங்கி - ரூ.760, ரோஜா - ரூ.240, பன்னீர் ரோஜா - ரூ.200, கேந்தி - ரூ.100, அரளி - ரூ.200, கோழிக்கோடு - ரூ.80, செவ்வந்தி - ரூ.280.


Next Story