கால்நடைகளுக்குகாணை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி:நாளை தொடங்குகிறது
கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்குகிறது என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேனி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3-வது சுற்று கால் மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த பணிகள் மார்ச் 28-ந்தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளிலும் 1 லட்சத்து 3 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர் தங்களது பகுதியில் தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்களுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story