ரூ.82 லட்சம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.82 லட்சம் திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டு விழா
x

சுரண்டை நகராட்சியில் ரூ.82 லட்சம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டில் ஐஸ்வர்யா கார்டன் அருகில் ரூ.47 லட்சம் நிதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் பூங்கா, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுரண்டை பஸ் நிலைய வளாகத்தில் நவீன சுகாதார வளாகம் கட்ட ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழாவிற்கு நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால், சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் ஆறுமுகசாமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பழனி நாடார் எம்.எல்.ஏ, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் சாந்தி தெய்வேந்திரன், அமுதா சந்திரன், பரமசிவன், பாலசுப்பிரமணியன், வைகை கணேசன், உஷா பிரபு, டான் கணேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story