இலவச மருத்துவ பரிசோதனை முகாம்


இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 21 Nov 2022 7:00 PM GMT (Updated: 21 Nov 2022 7:00 PM GMT)

பெரியகுளத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

தேனி

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் பெரியகுளம் பிறர் நலன் நாடுவோம் அறக்கட்டளை சார்பில் பெரியகுளம் தென்கரை பள்ளிவாசல் மண்டபத்தில் இலவச பல்துறை மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் பள்ளிவாசல் தலைமை இமாம் ஆசிக் அகமது யூசுபி வரவேற்றார். பள்ளிவாசல் பொருளாளர் அப்துல்காதர், உதவி தலைவர் காதர்பிச்சை, செயலாளர் கமால் ஆகியோர் தலைமை தாங்கினர். பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு டாக்டர்கள் ஜெகதீஸ், முத்துகுகன், ஷேக் ஹாலித், மாதவன் பிரவீன், ஹவ்வத்துல் ஆலம், நிரஞ்சன் பிரபாகர், பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் சர்க்கரை பரிசோதனை, தேவைப்பட்டவர்களுக்கு ஈ.சி.ஜி. மற்றும் ஸ்கேன் பரிசோதனை இலவசமாக பார்க்கப்பட்டது. 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் அப்துல் பாசித் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story