மின்சாரம் தாக்கி ஆடு சாவு


மின்சாரம் தாக்கி ஆடு சாவு
x

திசையன்விளையில் மின்சாரம் தாக்கி ஆடு இறந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை செல்வ மருதூரை சேர்ந்தவர் நம்பி (வயது 22). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இவருக்கு சொந்தமான ஆடுகளை பெட்டைகுளத்தில் உள்ள குளம் அருகே மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அங்குள்ள குளத்தில் மின் ஒயர் அறுந்து கிடந்துள்ளது. குளத்தில் தண்ணீர் குடிக்க சென்ற ஆடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக செத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை மின்வாரிய இளநிலை மின்பொறியாளர் கார்த்தி மற்றும் மின்வாரிய ஊழியா்கள் மின் இணைப்பை துண்டித்து அறுந்து கிடந்த மின் ஒயரை சரிசெய்தனர்.


Next Story