பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

பாலக்கோடு அருகே பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு; போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 38). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மோட்டுப்பட்டி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு பைக்கில் தாய் பெரியம்மாவுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது தண்டுகாரனஹள்ளி கோழிப்பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த 2 பேர் பைக்கை வழிமறித்து பெரியம்மா கழுத்திலிருந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து பாலக்கோடு போலீசில் மதோஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story