குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு


குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு
x
தினத்தந்தி 1 March 2023 6:45 PM GMT (Updated: 1 March 2023 6:45 PM GMT)

தென்காசியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

தென்காசி

தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று தென்காசி நகர தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. சுவாமி சன்னதி பஜாரில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் வாய்க்கால் பாலம் இசக்கியம்மன் கோவில் அருகில் 2 பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தாம்சன் பள்ளி அருகில் 100 பேருக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டது. பின்னர் மலையான் தெரு ரேஷன் கடை அருகில் குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களும் உள்நோயாளிகளுக்கு பழங்கள், ரொட்டி போன்றவை வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நகர கழக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் கவுரவப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு தென்காசி நகர செயலாளரும் நகர் மன்ற தலைவருமான சாதிர் தலைமை தாங்கினார். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளரும் நகர் மன்ற துணைத் தலைவருமான கே.என். எல். சுப்பையா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story