அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா


அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி  ஆண்டு விழா
x

முடிகொண்டான் ஒருங்கிணைந்த அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா

திருவாரூர்

நன்னிலம்:

திருவாரூர் கஸ்தூர்பாகாந்தி கல்வி நிறுவனங்களின் இணைப் பள்ளியான முடிகொண்டான் ஒருங்கிணைந்த அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியின் 58-ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது. ஒருங்கிணைந்த அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி நிர்வாக அறங்காவலர், தாளாளர் மற்றும் செயலாளர் சந்திராமுருகப்பன் தலைமை தாங்கினாா். தலைமை ஆசிரியர் வெங்கடசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். பெற்றோர்- ஆசிரியர் கழக கவுரவ தலைவர் பட்ஜெட் ராஜேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப் -இன்ஸ்பெக்டர் பாலு தேசியக்கொடியை ஏற்றி போட்டிகளை தொடக்கி வைத்தார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சேகர் நன்றி கூறினார். தொடர்ந்து மாலை நடைபெற்ற ஆண்டு விழாவில் தாளாளர் சந்திரா முருகப்பன் வரவேற்று பேசினார். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் விஜயலட்சுமி குணசேகரன் தலைமை தாங்கினாா். பள்ளி நிர்வாக அறங்காவலர் .ஜி.முருகப்பன், எம்.இன்பராஜ், மலர்விழி இன்பராஜ், முடிகொண்டான் ஊராட்சி தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் இராம. குணசேகரன், திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் எஸ். கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆசைமணி மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

விழாவில் கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் நிர்வாக மேலாளர் வீ. சின்னராஜ், முடிகொண்டான் ரமாமணி கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் பிரமிளா, கற்பகவள்ளி ஆகியோர்

கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.


Next Story