செல்போன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டியதால் அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்


செல்போன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டியதால் அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டியதால், அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தென்காசி

தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக சிவக்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தென்காசியில் இருந்து நெல்லை செல்லும் அரசு பஸ்சில் பணியாற்றும்போது செல்போன் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கிச் சென்றுள்ளார். இதனை அந்த பஸ்சில் சென்ற ஒரு பயணி, தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசு பஸ் நிர்வாகம், அவரை பணி இடைநீக்கம் செய்தது.


Related Tags :
Next Story