ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
குட்டக்குழி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆலன்மேஜர் இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று மதியம் 1 மணி அளவில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவிசங்கர், சுரேஷ்குமார், ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய மருத்துவ சங்க முன்னாள் அகில இந்திய தலைவர்கள் விஜயகுமார், ஜெயலால் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்காவிட்டால் தங்களது போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த தர்ணா போராட்டம் மதியம் 2 மணி வரை நடந்தது. பின்னர் டாக்டர்கள் கலைந்து சென்றனர்.