பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அதிவிரைவு ரத்த பரிசோதனை மையம்ஜி.கே.மணி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அதிவிரைவு ரத்த பரிசோதனை மையம்ஜி.கே.மணி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 25 March 2023 7:00 PM GMT (Updated: 25 March 2023 7:01 PM GMT)
தர்மபுரி

பென்னாகரம்:

கடந்த 2019-ம் ஆண்டு காயகல்ப திட்டத்தின் கீழ் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரி சிறந்த ஆஸ்பத்திரியாக தேர்வு செய்யப்பட்டது. இதற்காக ரூ.50 லட்சம் மற்றும் விருது வழங்கப்பட்டது. இதில் ரூ.10 லட்சத்தில் தமிழகத்தில் முதல் முறையாக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் விபத்து அவசர பிரிவு மற்றும் பிரசவ வார்டில் நோயாளிகள் அவர்கள் சிகிச்சை பெறும் இடத்திலேயே ரத்த பரிசோதனை செய்யும் வகையில் அதிவிரைவு ரத்த பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு ஒரு நிமிடத்தில் ரத்த பரிசோதனை முடிவுகள் வழங்கப்படும். இதற்கான தொடக்க விழா நேற்று அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது.

பென்னாகரம் மருத்துவ அலுவலர் டாக்டர் கனிமொழி தலைமை தாங்கினார். மருத்துவ இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் சவுண்டம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கலந்து கொண்டு அதிவிரைவு ரத்த பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என டாக்டர்களிடம் கேட்டு கொண்டார். இதில் பா.ம.க. மாநில துணைத்தலைவர் பாடி செல்வம், மாவட்ட தலைவர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி உள்பட கட்சியினர், டாக்டர்கள், மருத்துவ துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story