கம்பத்தில் கொலை செய்யப்பட்ட தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகியின் மனைவிக்கு அரசு வேலை


கம்பத்தில் கொலை செய்யப்பட்ட தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகியின் மனைவிக்கு அரசு வேலை
x

கம்பத்தில் கொலை செய்யப்பட்ட தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகியின் மனைவிக்கு அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

தேனி

தேனி:

கம்பம் சி.எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 35). இவர் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அங்குள்ள பொது கழிப்பறை அருகில் மதுகுடித்தவர்களை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட திருநாவுக்கரசின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், திருநாவுக்கரசின் மனைவி ஜோதிமணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்த விதிகளின் கீழ் உத்தமபாளையம் அருகே எரசக்கநாயக்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் சமையலராக பணி நியமனம் செய்து அரசு உத்தரவிட்டது.

இதற்கான பணி நியமன உத்தரவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நேற்று வழங்கப்பட்டது. ஜோதி மணியிடம் அந்த உத்தரவை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.


Related Tags :
Next Story