ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் கட்ட வேண்டும்


ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் கட்ட வேண்டும்
x

நீடாமங்கலத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டிட வசதி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரம் நீடாமங்கலம். இங்கு. சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நீடாமங்கலத்தில் மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், கோர்ட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார கடைகள் இயங்கி வருகிறது. ரெயில் நிலையமும் இங்கு உள்ளது.நீடாமங்கலத்தில் போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. சார்பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் ஆகிய அலுவலகங்கள் தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அரசு கிளை நூலகத்துக்கு சரியான கட்டிட வசதியில்லை. வட்டார கல்வி அலுவலகத்துக்கு தனி கட்டிடம் இல்லை. இந்த அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டிட வசதி செய்து தருவது அவசியம் ஆகும்.

ஒருங்கிணைந்த அரசு அலுவலகம்

நீடாமங்கலத்தில் கோா்ட்டு, சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களை ஒரே இடத்தில் கட்டி ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்காக பழுதடைந்த பழைய தாசில்தார் அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு அங்கு கோர்ட்டு, போலீஸ் நிலையம், காவல் ஆய்வாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் போன்ற அலுவலகங்களுக்கான ஒருங்கிணைந்த அரசு அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story