அரசு அலுவலகங்களில் வெகுவிரைவில் முழுமையாக கணினிமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படுகிறது


அரசு அலுவலகங்களில் வெகுவிரைவில் முழுமையாக கணினிமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படுகிறது
x

அரசு அலுவலகங்களில் வெகுவிரைவில் முழுமையாக கணினிமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் மின்னணு முறையில் கோப்புகள் கையாளுவதில் உள்ள நிறை குறைகள், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலை வகித்தார். இதையடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது;-

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அரசு அலுவலகங்களின் கோப்புகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் ஆளுமை திட்டத்தினை உருவாக்குவதில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் வெகுவிரைவில் முழுமையாக கணினிமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் பணிகள் மிக எளிமையாக்கப்படும். இன்றைய நவீன யுகத்தில் டிரோன் பயன்பாடு முக்கியமான ஒன்றாக மாறி வருகின்றது. எனவே, டிரோன்களை இயக்குவதற்கு அரசின் சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்கவும், மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் டிரோன்களின் மூலம் நிவாரணங்களை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். பின்னர் அவர் பெரம்பலூர் அமோனைட்ஸ் மையத்தினை பார்வையிட்டார்.


Next Story