அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை:

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2003-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை உடனே அறிவிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன், துணைத்தலைவர்கள் அருணாச்சலம், சண்முகமூர்த்தி, முத்துராமலிங்கம், ஆறுமுகபாண்டி, எலிசபெத் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு அரசு வணிக வரித்துறை அலுவலர் ஒன்றிய மாநிலத்தலைவர் ஆலிஷ் ஷீலா, தேசிய அரசு அலுவலர் கூட்டமைப்பு அகில இந்திய துணைத்தலைவர் சீதாராமன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மாவட்ட பொருளாளர் சிவ.நக்கீரன் உள்பட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story