கவர்னர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்


கவர்னர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
x
தினத்தந்தி 9 March 2023 3:13 AM GMT (Updated: 9 March 2023 5:24 AM GMT)

கவர்னர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை,

'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

'கவர்னர் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே... பாஜக அரசின் கவர்னர்கள் இதற்கு செவிமடுப்பார்களா?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இதுவரையிலான செயல்பாடுகளை பார்க்கும்போது, கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது" என்று கூறினார்.

மேலும் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கைது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை; வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது. தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் கைது கண்டிக்கத்தக்கது. பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக ஜெயிக்கலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்கக்கூடாது." என்று பதிலளித்துள்ளார்.


Next Story