அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்
பேரணாம்பட்டில் பணி வழங்கக்கோரி பெட்ரோல் பாட்டில்களுடன் பஸ் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பேரணாம்பட்டில் பணி வழங்கக்கோரி பெட்ரோல் பாட்டில்களுடன் பஸ் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தர்ணா போராட்டம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு போக்குவரத்து கழக பணி மனையில் பணி வழங்கக் கோரி கே.வி.குப்பம் வேப்பனேரி கிராமத்தை சேர்ந்த பஸ் டிரைவர் தேவராஜ், குடியாத்தம் பட்டு கிராமத்தை சேர்ந்த கண்டக்டர் பாபு ஆகியோர் பெட்ரோல் கேன்களுடன் தீக்குளிக்கப்போவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பஸ்சை இயக்க விடாமல் பெட்ரோல் பாட்டில்களுடன் பஸ் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் சென்னை செல்ல வேண்டிய பஸ் சுமார் 5.30 மணி நேரம் தாமதமாகவும், வேலூர் - சேலம் செல்லும் பஸ் 45 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்பட்டது.
பணியிடை நீக்கம்
இது குறித்து போக்குவரத்து வேலூர் துணை மேலாளர் பொன்பாண்டி நேரில் விசாரணை நடத்தினார். மேலும் வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி, போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர் தேவராஜ், கண்டக்டர் பாபு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.