அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு


அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
x

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை(வியாழக்கிழமை) முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், மாநில அளவிலான விளையாட்டு வீரர்களுக்கும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) இளங்கலை(பி.ஏ.) தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 6-ந் தேதியன்று இளங்கலை (பி.காம்) வணிகவியல், இளம் அறிவியல் (பி.எஸ்சி), கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்களது அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் சான்றிதழ்களின் 5 நகல்கள், 5 புகைப்படங்களோடு, தங்களது பெற்றோர்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு பெற்றவர்கள் சேர்க்கை கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பித்தவர்களின் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, கல்லூரி இணையதளமான www.gascjayankondam.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


Next Story