காந்தி பிறந்த நாளையொட்டி கிராமசபை கூட்டம்
காந்தி பிறந்த நாளையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் 121 கிராம ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மாவிலங்கை கிராம ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டார். மாவட்டங்களில் மற்ற கிராம ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கிராம ஊராட்சி, நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவை குறித்தும், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அதன் மூலம் பயன் பெறுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story