குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம்


குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம்
x

860 ஊராட்சியில் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.

திருவண்ணாமலை

860 ஊராட்சியில் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கிராமசபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) குடியரசு தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.

இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாக பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம்,

பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊடக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்பு திட்டம் இதர பொருட்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் நடைபெறும் இந்த கிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் பங்கு பெற்று கூட்டத்தில் வைக்கப்படும் பொருட்கள் குறித்து விவாதிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story