குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்
குடியரசு தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.
அரியலூர்
குடியரசு தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர். ஆண்டிமடம் ஒன்றியம், திருகளப்பூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ரமண சரஸ்வதி கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையரிடம் இருந்து வரப்பெற்ற கூட்ட பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்பட்டன. முடிவில் கிராம சபை கூட்டங்களில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு உறுதிமொழி, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி, தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story