அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்


அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்
x

அனைத்து ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம் நாளை(புதன்கிழமை) நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

மதுரை

அனைத்து ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம் நாளை(புதன்கிழமை) நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தணிக்கை அறிக்கை

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினமான, நாளை (22-ந் தேதி) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்க்க மாற்றத்தினை துரிதப்படுத்துதல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

கடமை

இந்த கிராம சபை கூட்டங்களில் அந்த ஊராட்சியை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும் இந்த கூட்ட விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story