மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி


மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
x

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பா.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி மனைவி காசியம்மாள்(வயது 65). இவர் தனது வீட்டு அருகே உள்ள சந்து ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்தபோது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட காசியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story