நிலக்கடலை ரூ.16½ லட்சத்துக்கு ஏலம்
நிலக்கடலை ரூ.16½ லட்சத்துக்கு ஏலம் போனது.
நொய்யல் அருகே சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் நிலக்கடலை ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம் மற்றும் க.பரமத்தி ஒன்றிய பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணெய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 240.68 ½ குவிண்டால் எடை கொண்ட 754 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் ஒரு கிலோ நிலக்கடலை அதிக விலையாக 70.80-க்கும், குறைந்த விலையாக 63.29-க்கும் சராசரி விலையாக 68.20 -க்கும் என 16 லட்சத்து 646-க்கு விற்பனையானது. இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் 754 மூட்டை நிலக்கடலை ரூ.16 லட்சத்து 646-க்கு விற்பனை ஆனது.