நிலக்கடலை விலை உயர்வு
நிலக்கடலை விலை உயர்ந்துள்ளது.
கரூர்
குளத்துப்பாளையம், குந்தாணிபாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் நிலக்கடலை பயிர் செய்துள்ளனர். நிலக்கடலை நன்றாக விளைந்ததும் பறித்து, காய வைத்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பின்னர் எண்ணெய் தயாரிக்கும் மில்களுக்கும், நிலக்கடலை பருப்பு விற்பனை செய்யும் கடைகளுக்கும் மூட்டைகளாக அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ நிலக்கடலை அதிகபட்சமாக ரூ.74-க்கு விற்பனையானது. இந்தவாரம் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது.
Related Tags :
Next Story