கொல்லங்கோடு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


கொல்லங்கோடு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

கொல்லங்கோடு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

கொல்லங்கோடு அருகே உள்ள கிராத்தூர் பண்டாரக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 58), தொழிலாளி. இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. ஜார்ஜ் மகன் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜார்ஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ஜார்ஜ் தனது அறைக்கு சென்று கதவை பூட்டி விட்டு தூங்கினார். மறுநாள் அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, அங்கு ஜார்ஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஜார்ஜின் மனைவி சவுந்தர்யா கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story