வாய்க்காலில் மூழ்கி டிரைவர் சாவு
வாய்க்காலில் மூழ்கி டிரைவர் சாவு
கடத்தூர்
கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். அவருடைய மகன் பிரகாஷ் (வயது 22). வேன் டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. இந்த நிலையில் பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் கோபி அருகே உள்ள மூலவாய்க்கால் வழியாக செல்லும் தடப்பள்ளி வாய்க்கால் கரையில் மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் குடிபோதையில் எதிர்பாராதவிதமாக தடப்பள்ளி வாய்க்கால் தண்ணீரில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் வாய்க்காலில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இது குறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வாய்க்காலில் இறங்கி பிரகாசின் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.