தலைமை ஆசிரியர் மீது பீர்பாட்டிலால் தாக்குதல்


தலைமை ஆசிரியர் மீது பீர்பாட்டிலால் தாக்குதல்
x

தலைமை ஆசிரியர் பீர்பாட்டிலால் தாக்கப்பட்டார்.

திருச்சி

முசிறி:

முசிறியில் உள்ள தா.பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 57). இவர் பெருமாள் பாளையம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் காரில் தனது வீட்டிற்கு சென்றபோது, வழியில் அமர்ந்து 3 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனை தட்டிக்கேட்ட சந்திரசேகரை, அவர்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த சந்திரசேகர், முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், முசிறி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story