குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம்


குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம்
x

புளியங்குடியில் குழந்தைகளுக்கான இருதய இலவச பரிசோதனை முகாம் நடந்தது.

தென்காசி

புளியங்குடி, செப்.13-

புளியங்குடி செயின்ட் மேரீஸ் மகப்பேறு மற்றும் பொது மருத்துவமனையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு செயின்ட் மேரீஸ் மருத்துவமனையின் தலைமை டாக்டர் சேவியர் தலைமை தாங்கினார். டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் ஜோஸ் ஆண்ட்ரு வளன் ராய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு வந்த குழந்தைகளுக்கு இலவசமாக இருதய ஸ்கேன், மூச்சு விடும் திறன் போன்ற இதர பரிசோதனைகள் செய்யப்பட்டது.

பரிசோதனைகளின் அடிப்படையில் இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு மதுரை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் வைத்து இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என உறுதியளிக்கபட்டது. முகாமில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர்.


Next Story