கனமழை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (12.12.22) பிற்பகல் 3 மணிக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளையும் (13.12.22) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழையினால் இன்று பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.