கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x

கனமழை காரணமாக நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. கோத்தரிகி, குன்னூர், கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் ஆகிய 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (புதன்கிழமை) விடுமுறை அளித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.


Next Story