திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை
திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, ஆம்பூர் ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது. மழை காரணமாக திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். அங்கு குளிக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏலகிரிமலையில் பெய்த மழை காரணமாக அங்கு தனியாருக்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருப்பத்தூர்- 15.7, ஆம்பூர்- 7.4, நாட்றம்பள்ளி- 7.2, திருப்பத்தூர் சக்கரை ஆலை-7.
Related Tags :
Next Story