ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்


ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
x

பள்ளிகொண்டாவில் சாலை பாதுகாப்பு வார நிறைவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

வேலூர்

அணைக்கட்டு

பள்ளிகொண்டாவில் சாலை பாதுகாப்பு வார நிறைவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சாலை பாதுகாப்பு நிறைவு விழாவை ஒட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஜெயக்குமார், சுங்கச்சாவடி முதன்மை மேலாளர் நரேஷ், மற்றும் சுங்கச்சாவடி மேலாளர்கள் செந்தில்குமார் (பள்ளிகொண்டா), வகாப் சஞ்சய் பாபு (வாணியம்பாடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை பாதுகாப்பு மேலாளர் சாம்சங் வரவேற்று பேசினார்.

வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் சுங்கச்சாவடியில் தொடங்கி இறைவன் காடு வழியாக சென்று மீண்டும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை சென்றடைந்தது. அப்போது பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மாவட்டத்திலேயே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டிஜிட்டல் பலகைவைத்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story