மார்த்தாண்டம் அருகே இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரி
களியக்காவிளை,
மார்த்தாண்டம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம் அருகே வட்டவிளை நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரியும் வட்டவிளை சந்திப்பில் இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் விஸ்வம்பரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் முருகன், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் மிசா சோமன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாயகூத்தன் உள்பட இந்து முன்னணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story