ஒகேனக்கல்லுக்கு, அரசு சார்பில் சமூக ஊடகவியலாளர்கள் குழுவினர் வருகை


ஒகேனக்கல்லுக்கு, அரசு சார்பில்  சமூக ஊடகவியலாளர்கள் குழுவினர் வருகை
x
தினத்தந்தி 29 Sep 2022 6:45 PM GMT (Updated: 29 Sep 2022 6:46 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு, அரசு சார்பில் சமூக ஊடகவியலாளர்கள் குழுவினர் வருகை

தர்மபுரி

பென்னாகரம்:

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழகத்தை கண்டுகளிப்போம் என்ற நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தமிழக சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரபல சமூக ஊடகவியலாளர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பிரபலம் அடையாத சுற்றுலா தலங்களில் உள்ள சிறப்புகளை அறிந்து சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்துவது வழக்கம். அதன்படி ஜவ்வாது மலை சுற்றுலா தலத்திற்கு சென்று அங்குள்ள சிறப்புகளை அறிந்தனர்.

இதையடுத்து தமிழகத்தில் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தும், மக்களிடையே இன்னும் பிரபலம் அடையாமல் உள்ள ஒகேனக்கல்லுக்கு நேற்று 10 பேர் கொண்ட சமூக ஊடகவியலாளர்கள் குழுவினர் வந்தனர். இவர்களை தர்மபுரி மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாவனா கதிரேசன் வரவேற்றார். பின்னர் அவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளை கண்டுகளித்தனர்


Next Story