கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இல்லம் தேடிக்கல்வி மையங்கள் செயல்படுகிறது
கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இல்லம் தேடிக்கல்வி மையங்கள் செயல்படுகிறது என சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) எம்பெருமான் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இல்லம் தேடிக்கல்வி மையங்கள் செயல்படுகிறது என சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) எம்பெருமான் கூறினார்.
270 மையங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மடவார்வளாகம் பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களில் சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) எம்பெருமான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசுப்பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த தமிழக அரசு இல்லம் தேடிக்கல்வி திட்டத்தை செயல்படுத்துகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 270 மையங்கள் செயல்பட்டு வருகிறது.
கற்றலை தூண்டுகிறது
தன்னார்வலர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறார்கள். மனிதனின் வாழ்வில் கல்வி மிக அவசியமானது. தவறாமல் அனைவரும் கல்வி கற்க வேண்டும். இல்லம் தேடிக்கல்வி மையங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு நல் வழிகாட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுபடுத்தி, தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், தன்னார்வலர்கள் சிவகாமி, முத்துச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.