அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு சீனிவாசன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, நகர செயலாளர் தனபாலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமையில் விருதுநகர் நகராட்சி அலுவலகத்திற்கு எதிராக உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் கலாநிதி, நகர செயலாளர் முகமது நைனார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்ச ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓ.பி.எஸ். அணிசார்பில் மாநில அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் முன்னாள் யூனியன் துணைத்தலைவர் மூக்கையா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற அவைத்தலைவர் ஜெயக்கொடி, நகர செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.