ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு...!


ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு...!
x

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 2 முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர். இங்கு 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் இன்று 2 முதுமக்கள் தாழியில் மனிதனின் அனைத்து எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 முதுமக்கள் தாழியில் தலை, தாடை, பல், கை, கால், முதுகு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, பற்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Next Story