கட்சி, ஆட்சி இரண்டிலும் சிறப்பாக பணியாற்றி ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்று தருகிறார் உதயநிதி : முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


கட்சி, ஆட்சி இரண்டிலும் சிறப்பாக பணியாற்றி ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்று தருகிறார் உதயநிதி : முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 July 2023 1:27 PM IST (Updated: 29 July 2023 3:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளுக்கான அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளுக்கான அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

கட்சி, ஆட்சி இரண்டிலும் சிறப்பாக பணியாற்றி ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்று தருகிறார் உதயநிதி. இளைஞரணி செயலாளர் உதயநிதியை எடுத்துக்காட்டாக வைத்து செயல்பட வேண்டும். திமுக இளைஞரணி தீர்மானங்களை பார்க்கும்போது மிகுந்த நிம்மதி அடைகிறேன்.

உதயநிதி மேற்கொண்ட செங்கல் பிரசாரத்தை எதிர்க்கட்சிகளே மறக்கவில்லை. சேப்பாக்கம் தொகுதியை விட மற்ற தொகுதிகளில் அதிக பிரசாரம் மேற்கொண்டார் உதயநிதி. 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தை நடத்தி காட்டினார்.

இளைஞரணி நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். இளைஞரணி செயலாளராக உதயநிதி பல்வேறு சாதனையை செய்து வருகிறார். இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து திமுகவை உதயநிதி பலப்படுத்தி உள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் சுற்றி சுழன்று பணியாற்றினார் உதயநிதி. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story