மாற்றுத்திறனாளிகள் 45 பேருக்கு அடையாள அட்டை


மாற்றுத்திறனாளிகள் 45 பேருக்கு அடையாள அட்டை
x

மாற்றுத்திறனாளிகள் 45 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்

பேராவூரணி:-

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை தனி தாசில்தார் தரணிகா முன்னிலை வகித்தார். பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகள் 45 பேருக்கு அடையாள அட்டை, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், பொது மருத்துவர், கண் மருத்துவர், முடநீக்கியல் மருத்துவர், மனநல மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்தனர். முகாமில் மத்திய அரசின் தேசிய அடையாள அட்டை பெற 102 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சமூக நலத்துறை உதவித்தொகைக்காக 35 விண்ணப்பங்கள், உதவி உபகரணங்கள் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகைக்காக 10 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story