நான் மாமன்னன் படம் பார்க்கவில்லை: எடப்பாடி பழனிசாமி


நான் மாமன்னன் படம் பார்க்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 2 July 2023 4:29 PM GMT (Updated: 2 July 2023 4:36 PM GMT)

"நான் மாமன்னன் படம் பார்க்கவில்லை. பார்க்காததை குறித்து நான் எப்படி பேச முடியும். எங்களுடைய இயக்கம் வேறு, அவர்களுடைய இயக்கம் வேறு. என்று கூறினார்.

சென்னை,

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மாமன்னன்' படத்தின் வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டானர்.

இந்நிலையில், அ.தி.மு.க. செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். இவரிடம் 'மாமன்னன்' திரைப்படம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி, "நான் மாமன்னன் படம் பார்க்கவில்லை. பார்க்காததை குறித்து நான் எப்படி பேச முடியும். எங்களுடைய இயக்கம் வேறு, அவர்களுடைய இயக்கம் வேறு. எங்கள் இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால், அதில் எதாவது திரைக்கு வந்திருந்தால் அதில் இருந்த கருத்துகளை கேட்டால் படம் நான் பார்த்திருந்தால் அதற்கான பதிலை நான் சொல்ல தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.


Next Story