லண்டனில் எனக்கு சொத்து இருந்தால், அதனை நானே அரசுடமையாக வழங்குவேன் - டி.டி.வி.தினகரன் பேட்டி


லண்டனில் எனக்கு சொத்து இருந்தால், அதனை நானே அரசுடமையாக வழங்குவேன் - டி.டி.வி.தினகரன் பேட்டி
x

லண்டனில் சொத்து இருந்தால், அதனை நானே அரசுடமையாக வழங்குவேன் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கையில் அமமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்டபின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பேன், நல்ல திட்டங்களை வரவேற்பேன், ராகுல்காந்தி ஆதரித்த சட்டமே, அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையில் மத்திய அரசின் தலையீடு இல்லை.

ஓபிஎஸ் நடத்தும் திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்தால் ஆலோசிப்பேன். லண்டனில் சொத்து இருந்தால், அதனை நானே அரசுடமையாக வழங்குவேன் என்றார்.


Next Story