யாராவது தவறாக நடக்க முயன்றால், பெற்றோரிடம் மாணவிகள் தெரிவிக்க வேண்டும்


யாராவது தவறாக நடக்க முயன்றால், பெற்றோரிடம் மாணவிகள் தெரிவிக்க வேண்டும்
x

யாராவது தவறாக நடக்க முயன்றால், பெற்றோரிடம் மாணவிகள் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

பெரம்பலூர்

குன்னம்:

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அசூர் கிராமத்தில் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிகளில் ெபரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், பெண் குழந்தைகள் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் நண்பர்களிடம் பழகுவதைப் போன்று வீட்டில் பெற்றோரிடமும் பழக வேண்டும். பள்ளியிலோ அல்லது பொது இடங்களிலோ மாணவிகளிடம் யாராவது தவறாக நடந்து கொள்ள முயன்றால், அவர்களை பற்றிய தகவலை பெற்றோரிடமோ, பள்ளி ஆசிரியர்களிடமோ, அல்லது போலீஸ் நிலையத்திலோ தெரிவிக்க வேண்டும். காவல்துறை எப்போதும் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறது, என்றார்.

செயல்முறை பயிற்சி

மேலும் குழந்தைகளுக்கு தொடுதல் முறையை பற்றி செயல்முறை பயிற்சி அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜனனி பிரியா, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story