இதை கொடுத்தால் 1 கிலோ தக்காளி இலவசம்.. அலைமோதிய பெண்கள் கூட்டம்
தஞ்சையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது
தஞ்சையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொடுக்கும் முதல் 50 பெண்களுக்கு 1 கிலோ தக்காளி வழங்குவதாக தனியார் அறக்கட்டளை நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து தங்கள் வீடுகளில் கிடந்த மட்காத பிளாஸ்டிக் பொருட்களைக் கொடுத்து விட்டு பெண்கள் மகிழ்ச்சியுடன் தக்காளி வாங்கிச் சென்றனர். தஞ்சை துணைமேயர் அஞ்சுகம் பூபதி பெண்களுக்குத் தக்காளிகளை வழங்கினார்.
Related Tags :
Next Story