586 இடங்களில்மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம்
586 இடங்களில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் 586 இடங்களில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது.
மகளிர் உரிமைத்தொகை
தமிழக அரசு சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கி, முகாம் மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 67 ஆயிரத்து 316 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்காக முதல் கட்டமாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 639 ரேஷன் கடைகளுக்குட்பட்ட வீடுகளில் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கினர். அவர்களுக்கு 24-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை, 586 இடங்களில் முகாம் அமைத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.
சிறப்பு முகாம்
2-ம் கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை, 568 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடுவீடாக விண்ணப்பம் வழங்கப்பட்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை, 544 இடங்களில் முகாம் அமைத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். 2 கட்டங்களாக 3 லட்சத்து 25 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டதில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் மட்டும் பதிவேற்றம் செய்தனர்.
விண்ணப்பம் பெற்று பல்வேறு காரணத்தால் பதிவேற்றம் செய்யாதவர்களுக்காக 3 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே முகாம் நடந்த 586 இடங்களில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டன. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பங்களை கொண்டு வந்து பதிவேற்றம் செய்தனர். இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்க உள்ளது.