சின்னமனூர் ஒன்றியத்தில் 11 ஊராட்சி செயலாளர்கள் திடீர் இடமாற்றம்


சின்னமனூர் ஒன்றியத்தில்  11 ஊராட்சி செயலாளர்கள் திடீர் இடமாற்றம்
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் ஒன்றியத்தில் 11 ஊராட்சி செயலாளர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தேனி

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் 11 ஊராட்சி எழுத்தர்கள் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாரதமணி பிறப்பித்தார். அதன்படி, அழகாபுரி, வேப்பம்பட்டி, எரணம்பட்டி, சங்கராபுரம், பொட்டிப்புரம், எரசக்கநாயக்கனூர், புலிகுத்தி, முத்துலாபுரம், பூலானந்தபுரம், காமாட்சிபுரம், கன்னிசேர்வைபட்டி ஆகிய ஊராட்சிகளின் எழுத்தர்கள் வேறு ஊராட்சிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊராட்சி எழுத்தர்கள் 11 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் சின்னமனூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Related Tags :
Next Story