ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


ஈரோடு மாநகராட்சியில்  ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பெரும்பள்ளம் ஓடையை அழகுபடுத்தி மேம்பாடு செய்யும் பணி ரூ.200 கோடியே 71 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.

ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.45 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு ஆர்.கே.வி ரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் மேம்பாடு செய்யும் பணிகள் ரூ.32 கோடியே 29 லட்சம் செலவில் நடக்கிறது. ஈரோடு மற்றும் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி, பெரியசேமூர் ஆகிய 4 பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.107 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர், பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை பார்வையிட்டு, உணவினை ருசிபார்த்தார். இதைத்தொடர்ந்து, ஈரோடு தில்லைநகர் பகுதியில் நடைபெற்ற கொசுஒழிப்பு பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், செயற்பொறியாளர் விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story