ஈரோடு அரசு பள்ளியில்காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு


ஈரோடு அரசு பள்ளியில்காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு
x

ஈரோடு அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தாா்.

ஈரோடு

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் முதலாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 கட்டங்களாக தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,079 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 51 ஆயிரத்து 751 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு காவிரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் நேற்று காலை திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை அவரும் வாங்கி ருசி பார்த்தார். தொடர்ந்து காலை உணவு திட்டத்துக்காக உருவாக்கப்பட்டு உள்ள செல்போன் செயலியின் செயல்பாடுகளையும் ஆய்வு நடத்தினார்.

ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.200 கோடி செலவில் 12½ கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து வரும் சீரமைப்பு பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாநகர பொறியாளர் விஜயகுமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ், மாநகா் நல அதிகாரி பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story