கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்புவிவசாயிகள் முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ஆதிமூலம் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2022-23-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளையரசனேந்தல் பிர்க்காவிலுள்ள 12 பஞ்சாயத்துகளிலும் விவசாயிகளுக்கு கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். வடக்குப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்மை துறை மூலம் ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணை திட்டத்தில் ரூ.1 லட்சம் வழங்குவதற்கு பதிலாக, ரூ.33 ஆயிரம் கணக்கில் வரவு வைத்துள்ளனர். உழவு, விதை மானியத்தை பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் கோரிக்ைக மனுவை உதவி கலெக்டர் ஜோன் கிறிஸ்டிபாயிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.