புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்புமின்சார ஒயர் அறுந்து விழுந்ததுபோக்குவரத்து பாதிப்பு


புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்புமின்சார ஒயர் அறுந்து விழுந்ததுபோக்குவரத்து பாதிப்பு
x

போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு உள்ள மின்சார கம்பத்தில் இருந்து எதிரே உள்ள மளிகை கடைக்கு செல்லும் மின்சார ஒயர் நேற்று இரவு திடீரென அறுந்து விழுந்தது. இதனால் சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து மின்சார ஒயரை அகற்றினார்கள். அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீரானது.


Next Story